எனக்காக பிறந்தவளா 17

Episode 17 : எனக்காக பிறந்தவளா ??

வசந்த் மைதிலி எண்களுக்கு Dial செய்கிறான், Ring போகிறது மனதில் கவலை அனைத்தும் கரைகிறது இன்பம் வெளிச்சமிட்டது புது துடிப்பு பிறந்தது . ஆவல் எதிர்முனையில் அவள் குரல் கேட்க்கும் எண்ணத்தில் கூர்மையாக மொபைல் சத்தில் தங்கியிருந்தது . கடைசி வரை Ring சத்தம் மட்டும்தான் ஒலித்தது . காரணம் புரியவில்லை ring போனது கவலை சற்றே குறைத்திருந்தது . மைதிலி என்ன ஆச்சு என்னதான் நினைக்குற நீ எனக்காக தான் மொபைல ஸ்விசாப் பணி இருக்கிய, அப்படி என்ன நான் பண்ணிட ??

மீண்டும் ஒருமுறை கடைசி முறை முயற்சிக்கிறான் ரிசிவ் ஆகவில்லை, தோல்வியில் புதிதாக கண்ணத்தில் சுமை கூடியிருந்தது, மூன்று நாட்களாக சோகத்தில் முகம் சோர்ந்து போய் கொஞ்சம் அசிங்கமாக இருந்தது, கூட இருக்கவங்க மூட்டகலங்கி போச்சுனுதான் சொல்லல மத்தபடி அவமானம் செய்ய முடிந்தவரை அவரவர் பங்கை தீர்த்துக்கொண்டார்கள் . கண்ணாடியில் முகம் பார்க்கிறான் பழய மாளிகையில் இருக்கும் மொத்த அழுக்கும் அவன் முகத்தில்தான் இருந்தது .

முதலில் இந்த வேஷத்தை மொத்தமாக Shave செய்து தன்னை புத்துணர்வாக மாற்றிக்கொள்ள நினைத்தான், ஒழுங்க சாப்படனும் அப்பறம் அந்த Freshness ஒட, தேடனும் பத்ரூம் கதவுகள் நுயைந்தவன் ஈரத்தலையில் நிறம்கூடி ஆற்றல் பெற்று புதிதாக வருகிறான் அவன் மேனியில் soap-n நறுமனம் வீசியது . . சாப்பிடுகிறான், ஓய்வு உறக்கத்தில் இருப்பதாள் தூக்கம் தேவைபடுகிறது . படுத்துக்கொள்கிறான் அந்த சத்தமும் இல்லாத அமைதியான தூக்கம் கலைப்பு மனதிலிருந்து கழன்றுவிடுகிறது .

தூக்க முழுமையாக களைந்து எழும்போது Mobile இசைந்துகொண்டிருந்தது . " மைதிலியிடம் இருந்து கால் வந்துதிருந்தது . இது கனவு இல்லை . Attend செய்கிறான் .
"ஹலோ" அது மைதிலியின் குரல்.
"ஹலோ மைதிலி ... என்ன ஆச்சு, ஏன் Mobile swift off பண்ணிட, இப்பலாம் fancyக்கு கூட வரது இல்ல என்ன ஆச்சு நான் உன்ன ரொம்ப தேடின மைதிலி "
"வசந்த் என்னையும் கொஞ்சம் பேசவிடுப்பா "
" ம் சொல்லு மைதிலி "
" எனக்கு புதுசா ஒரு job கிடச்சு இருக்கு, வேற room change ஆகிட இந்த schedule ல என்னால யாருக்கிட்டயும் பேச முடியாம பொய்டுச்சு, If i hurting you mean really sorry for that,pls forgive me " .
வசந்தின் சுவாசம் ஒரு நிமிடம் தொண்டைக்குள் தேங்கிவிட்டது. தன் உயிர் தன்னிடம் மன்னிக்க சொல்லி கேட்கிறது, அதன் மீது உள்ள அத்தனை ஆசைகளும் நெஞ்சிக்குள் உணரப்படுகிறது .
" யே ! விடு உனக்கு job கிடச்சு இருக்குனு சொன்ன போதாத, என்கிட்ட sorry கேக்கனுமா ?"
"ம் ! என்ன பேசவிடாம நீ திட்னயில்ல அதா வசந்த் "
" ஏய் ! நான் எங்க திட்ன ?"
"நீ திட்ன டா"
" உன்கிட்ட argue பண்ண முடியாது, என்ன job கிடச்சு இருக்கு, பிடிச்சு இருக்கா ?"
"ம் ! chance இல்ல வசந்த் செமா ஜாலிய இருக்கு இந்த job ரொம்ப பிடிச்சு இருக்கு, BPO monthly10K salary"
"இதகூட ஒரு msg- la send பண்ண தோனலயில்ல "
"hey ! am very busy thats why pls understand my situation "
( இப்படி பேசியே என்ன மயக்கிடு டி தன்னுள் நினைத்துக்கொண்டு அவள் பேசுவதை ரசித்துக்கொண்டிருந்தான், புதிதாக அதிகம் அங்கிலம் பேசினால் அவள் குரலுக்கு அது அழகாக இருந்தது )
" வசந்த் நாங்க மாயாஜால இருக்கோம் வசந்த் நீ வரியா"
" எனக்கும் உன்ன பாக்கானும்னு தோனுது நான் கண்டிப்பா வர" .
"ம் ஏய் ! வரும்போது கொஞ்சம் cash எடுத்துனு வா,கொஞ்சம் quick ah வா, உனக்காக wait பண்ற "
"இதோ உடனே வர"

இணைப்பு துன்டிக்கப்பட்டவுடன் வசந்த் யோசனை செய்கிறான் . சே ! இதுக்கு எவ்ளோ போராட்டம், எப்படியோ ஒரு வழிய பேசிட அவளுக்கு ஒன்னும் ஆகல, அவ வாய்க்கூட குறையல அப்படியே பேசுற " என்றெல்லாம் நினைக்கையில் மூச்சு காற்று சுதந்திரம் வாங்கியது .

" உனக்காக wait பண்ற சிகீரம் வா "

இதோ வந்துட மைதிலி உன்ன பாக்கதானே இத்தனை நாளாய் துடியாய் துடித்தேன், உன்னை காக்க விடுவேனா இதோ இதோவே வருகிறேன் . வசந்த் வேகமானான் மூன்று நாட்கள் காத்திருந்த மொத்த நரம்புகளும் வேகம் பிடித்து அவளை கான விரய வைத்தது .

மாயஜால் எத்தனைமுறை கேள்விப்பட்ருக்கேன் . பஸ்க்கு காத்திருந்த நொடிகள் கூட அவனுக்கு யுகங்கள் கடப்பது போல் சீரமாக இருந்தது , கால்கள் தரையில் நிக்காமல் துடித்தது . ஒரு வழியாக பஸ் கண்ணில் பட ஏறினான், Traffic, பஸ்-il போவதை விட நடந்து போலம் என்று வெறுக்கும் அளவிற்க்கு மெதுவாக உருண்டது . ட்ரைவரை தீட்ட தோனியது , சென்னையை வெறுக்க தோனியது, அரசாங்கத்தை முன்பே தீட்டி முடித்திருந்தான் .

பஸ்சின் steel சுவரை உதைத்தில் அவன் கால்கள் வலித்தது . பஸ்-ஐ விட்டு இறங்கி, " எல்லாம் அவரால என்று அவன் தந்தைதான் காரணம் என்று மொத்த பழியையும் தந்தை மேல் போட்டான், ஒரு வாக்கியதில் " சே ! ஒரு pulsar பைக் கூட வாங்கி தர மாட்டார், pulsar இருந்தா இப்ப அவள பாத்து இருப்ப, வரும்போது Bike ல வச்சு அவ என் பக்கத்துல, அவ கை என் தோள்ல, Road-oda இந்த பள்ளதுல என்னோட வாலிபத்தோட மொத்த ஆசையும் ஒரு speedbreak ல நிறைவு செய்யப்பட்டிருக்கும் .

வேகமாக நடந்தான் வேர்வை சட்டையை நனைத்தது . bike -ல வரும் சிலரிடம் lift கேக்க யாரும் தரவில்லை, அவனை கண்டுக்கொள்ளவும் இல்லை . ஏன்ன சுமூகம் இது தூ ! எந்திரங்க எந்திரங்க என்று திட்ட தொடங்கினான் .
ரவிகிட்ட bike இருக்கு கால் பண்ணு யோசனை எந்த திசையிலிருந்து வந்தது என்று தெரியவில்லை .

ரவியின் Ringtone அவனுக்கு வெறுப்புடியது .
" ஹலோ மச்சி எங்க இருக்கடா "
" கிண்டில மச்சி " ரவி .
"மசி நான் மத்திய கைலாஷ்ல இருக்க கொஞ்சம் வா டா "
"ஏன் டா ?"
" ஒரு முக்கியமான matter, emergency வா "
அவனும் 5த் gear-il முறுக்கி ட்ரபிக்-ஐ விட்டுதிருப்பி அசத்தலாக வந்துவிட்டான் 10 நிமிடங்களில் '
" என்டா இவ்ளோ late" வசந்த் .
ரவியின் பார்வையில் நியாயம் இருந்தது . அவன் பதில் சொல்லவில்லை கண்களில் பழித்துவிட்டான் .
" நா matter டா"
' மச்சி மைதிலி மாயாஜல் வர சொல்லி இருக்கா டா wait பண்ணிட்டு இருக்க நான் போனும் "
" டேய் ! எதோemergencyனு உயிர பனைய வெச்சு வந்தன் டா "
"bike வேணும் அதா வர சொன்ன, நீ கலம்பு மச்சி நா வீட்ல எடுத்துனு வந்து விட்டுற "
" நான் எப்படி போறது டா "
" கிண்டிதானே எவ்ளோ பஸ் இருக்கு, பஸ்ல போ மச்சி"
" ஐ! இது சுப்பர இருக்கு, நீ கால் பணிகூப்டுவ நான் வந்து உன்கிட்ட பைக்க விட்டு போகனுமா, அதலாம் முடியாது "
" மச்சி மச்சி ப்ளிஸ் நான் போகனும் டா "
" தம்பி வாய்பே இல்ல உன் மேல செமா காண்டுல இருக்க "
" மச்சி அவ பாவம் டா ரொம்ப நேரமா வைட் பண்ற "
" பண்ணட்டும் டா, என்ன ஒவர இருக்கு, வசந்த் எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு அவ கூப்டானு மடத்தனமா இப்படி ஓடி வந்து, லூசு மாறி behave பண்ற, வேற எதனா matter நா கொடுத்துருவ ப்ட் இதுக்குலாம் தர முடியாது " ரவி .
" டேய்! புரிஞ்சுக்கோ அவளுக்கு problem 1st time help-ku கூட்டுற நான் வரன்னு சொலிட்ட போனும் " . "ப்ளிஸ் மச்சி" கையில் இருந்த சாவி கெஞ்சி வாங்கினான் .

வண்டி புகைபிடித்து பறக்க, இதுவரை அவன் ஏட்டாத வேகத்தை தொட்டு ட்ரவிக் - ஐ சில உராய்வுகளில் மெல்லிய இடைவேளை கடந்தான் . சிக்னல் வேர்த்தது packet-i mobile இசைத்தது .
" ஹலோ"
" வசந்த் இன்னும் எவ்ளோ நேரம் ஆகும்"
" இன்னும் 10 mins ல வந்துருவ "
" வசந்த் கொஞ்சம் quick" பச்சை விளக்கு .
Bike முரண்டு பிடிக்கத் துவங்கியது பெட்ரொல் காலியா " கடவுளே" என்று புதுசா வேண்டிக்கொண்டான் . வேற எதோ problem போல , மறுபடி வண்டி சிராக சென்றது . "இதோ வந்துட மைதிலி உன்ன பாக்கனு எத்தன நாள் இதோ வந்துட" எதிரில் சென்றுக்கொண்டிருந்த கார் திடீறென நின்றது, பதற்றத்தில் break பிடிக்காமல் வேகமாக காரில் முட்டி சக்கரம் left-ல் கவிந்ததில் balance தவறி ரொட்டில் விழுந்தன் . பின்னாடி வந்த Duster கார் அவன் கண்களுக்கு 8 மீட்டர் தொலைவில் 50கிமீ வேகத்தில் வர இறுக்கமாக கண்மூடிக்கொண்டான் .

எழுதியவர் : kavi Tamil Nishanth (12-Apr-16, 2:59 am)
பார்வை : 218

மேலே