உலகத்திலயே பெரிய ஆணி என்ன

உலகத்திலயே பெரிய ஆணி என்ன என்ற மகளின் கேள்விக்கு விடை தேடும்போது பல புதிய வார்த்தைகளை கற்றேன்.

1. அருக்காணி - அருமை , Rare, Precious
2. அருக்காணி - அழுத்தம்
3. ஆணி - மேற்கு ஓடு ஆறு. ஆண் ஆறு
4. ஆணி - ஆதாரம் - protection
5. ஆணி - ஆசை, desire
6. இருப்பாணி - இரும்பு + ஆணி, iron nail
7. உரையாணி - உரையாடுதல்
8. ஊற்றாணி - Nail which fastens the plough-beam to the plough
9. ஓடாணி - அணிகலன்களை மாட்டு ஆணி
10. கழுவாணி - கழுவிலுள்ள இருப்பு முள்.
11. கிரம்பாணி - கிராம்பை போல் இருக்கும் ஆணி
12. கீலாணி - Hinge nail- கதவு முதலியவற்றின் கீலைப் பற்றியிருக்கும் ஆணி
13. குடையாணி
14. குண்டாணி - குண்டான்சட்டி
15. குந்தாணி - ஒரு கண் நோய்
16. குமிழாணி - Stud- nail - தலையிற் குமிழ்கொண்ட ஆணி. (Bubble போன்ற தலை கொட்டது - இப்படி தமிழில் விளக்க வேண்டி இருக்கு)
17. கூட்டாணி - இணைக்கும் ஆணி
18. கையாணி - Rafter nail
19. கொண்டையாணி
20. கோவையாணி - கை மரங்களை இணைக்கும் முளை
21. சுள்ளாணி - சிறிய ஆணி
22. தரையாணி - ஆணி வகை
23. நிம்பாணி - Coupling nail
24. நுகத்தாணி - நுகத்தடியை ஏர்க்காலில் இணைக்கும் ஆணி.
25. மதியாணி - பொழுது சாய
26. மரவாணி - மரக்கடை
27. மறுசுற்றாணி - bolt and nut
28. மாப்பிள்ளையாணி - கலப்பைக் குற்றியோடு மேழியைச் சேர்க் கும் ஆணி
29. மார்ப்பாணி -மூலமாய்
30. முகட்டாணி - கூரையின் உச்சியிலுள்ள மரஆணிவகை.
31. மெதுகாணி - A polishing tool.
32. வரிச்சலாணி - Nails for fastening reepers
33. வரிச்சலாணி - பிடிவாதக்காரன்
34. வளைவாணி - கொக்கி
35. வங்காணி - Wooden peg
36. வேண்பாணி - சிறிய ஆணி
37. ஆணி - bed
38. ஆணி - எல்லை
39. கண்ணாணி - Touch-needle
40. எழுத்தாணி
41. கங்காணி

அவள் சொன்ன பெரிய ஆணி. இங்கே விடுபட்டிருக்கும் ஆணி - பிரியாணி

- விழியன்

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு முகநூல்) (11-Apr-16, 10:02 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 180

மேலே