10 செகண்ட் கதைகள் - அப்பரன்டிஸ்

விறகு பொறுக்க வந்த வேலம்மாள் இடுப்பிலிருந்த நான்கு வயது மகளை இறக்கி விட்டு விட்டு வேலையை தொடங்கினாள்; வேலை முடித்து விறகுகளை, சுள்ளிகளை பிரித்தெடுத்து கட்டும் போது பார்த்தாள், சின்னஞ்சிறு கைகளில் அவளுடன் அவள் மகளும் சேர்த்து எடுத்து கொடுத்த சுள்ளிகளும் சேர்ந்து கொண்டன; சுமையுடன் மகளையும் தூக்கி கொண்டு சென்றவளின் மகளுக்கு இன்று முதல் விறகு பொறுக்கும் பாடம்.. ...

எழுதியவர் : செல்வமணி (11-Apr-16, 9:32 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 174

மேலே