காதலன் என்னிடம் கவிதை சொல்வதால்--முஹம்மத் ஸர்பான்

மேகங்கள் என்னிடம்
மழையாகி வருகிறது.
தாகங்கள் என்னிடம்
கடலாகி போகிறது
உறக்கமும் என்னிடம்
கனவாக மறுக்கிறது.
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
பூக்களும் என்னிடம்
முள்ளாக மாறியது
சோலையும் என்னிடம்
பாலையாய் வரண்டது
நிலவும் என்னிடம்
பேசாமல் போனது..,
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
வெட்கமும் என்னிடம்
நெருக்கமாய் ஒட்டியது
புன்னகையும் என்னிடம்
கண்ணீரை கேட்கிறது
இமைகளும் என்னிடம்
விழிகளை வாங்கியது
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,
கைகளும் என்னிடம்
தடியாக தண்டிக்கிறது
கால்களும் என்னிடம்
முடமாக தவழ்கிறது
இதயமும் என்னிடம்
இல்லாமல் தொலைகிறது
காதலன் என்னிடம்
கவிதை சொல்வதால்...,