தினம் ஒரு தத்துவ பாட்டு 1 = 73

வந்துடுச்சி வந்துடுச்சி எலக்ஸன் வந்துடுச்சி
ஏழைகளை ஏமாற்றும் எலக்ஸன் வந்துடுச்சி

பண்ணிடுச்சி பண்ணிடுச்சி கலெக்ஸன் பண்ணிடுச்சி
மாவட்ட ரீதியா கலெக்ஸன் பண்ணிடுச்சி

தந்துடுச்சி தந்துடுச்சி டொனஸன் தந்துடுச்சி
கள்ளவோட்டு போட்டுட டொனஸன் தந்துடுச்சி

ஆயிடுச்சி ஆயிடுச்சி செலக்ஸன் ஆயிடுச்சி
அறுதி பெரும்பாண்மையுடன் செலக்ஸன் ஆயிடுச்சி

ஆளுநர பாத்துடுச்சி ஒப்புதல் வாங்கிடுச்சி
கேரவன்கள் அம்பாரியுடன் அரசவை அமைச்சிடுச்சி

பேரவை கூடிடுச்சி பெருச்சாலிகள் நுழைஞ்சிடுச்சி
பென்ச்சு உடையும்வரை கரவொலி எழுப்பிடுச்சி

வாக்குறுதி அள்ளிவீசி வாக்குகள பெற்ற கட்சி
விலைவாசிக்கு முற்றுப்புள்ளி வைக்க தவறிடுச்சி

அறிக்கைகள் விட்டுடுச்சி; -‘ஃபைல்கள்’ ஆமைப்போல் நகர்ந்துடுச்சி
எதிர்த்து கேட்ட எதிர்கட்சிய மைக்கால் அடிச்சிடுச்சி…

பட்ஜட் தாக்கல் செய்துடுச்சி; நூற்றுபத்தாம் விதியை படிச்சிடுச்சி
பக்கம் பக்கமா பத்திரிகையில் பக்கா விளம்பரம் கொடுத்திடுச்சி

ஆமாம் போடும் ஆசாமிக்கு அவையிலே ஆரத்தி எடுத்திடுச்சி
கோபம் காட்டும் ஆசாமிய வெளியிலே தூக்கி எறிஞ்சிடுச்சி

ஆளும்கட்சிக்கு ஆதரவா சபாநாயகர் எந்திரிச்சி
எதிர்கட்சிக்கு தொந்தரவா..? சனநாயகம் நொந்திருச்சி

வேலை வெட்டி இல்லாத வெறும் கட்சி உன் கட்சி
என்றதுமே எதிர்கட்சி வெளி நடப்பு செய்துடிச்சி…

நேற்றுவரை ஆளும்கட்சி; இன்று அது எதிர்கட்சி
எத்தனை ஆட்சி மாறினாலும் நாட்டிலெங்கே நல்லாட்சி..

லட்டர்பேடு கட்சிக்கெல்லாம் கார்களிலே தேசிய கொடி
ஜாதிமத சாக்கடைகெல்லாம் தேர்தலிலே வசியப் பொடி..
வாழ்க ஜனநாயகம் ! ஜனநாயகம் வாழ்கவே !

எழுதியவர் : சாய்மாறன் (12-Apr-16, 4:49 pm)
பார்வை : 84

மேலே