ஒரு தலையில்லாக்காதல்
விழிகளில் தொடங்கிய
விழியில்ல காதல்...
மனதினில் முடங்கிய
மதியில்லா காதல்...
ஒரு கணம் உனைக்கண்டால்
உல்லாசத்தில் திகைக்கும் மனம்...
மறுகனமே உதிரும் பூக்களாய்
சோகம் வந்துகவ்வும்,,,
உன்னிடம் பேச
வார்த்தைகள் பஞ்சம்...
உணர்வுகள் யாவும்
உன்னிடம் தஞ்சம்....
மழைசுமந்த கருமேகமாய்
கூடிக்கலைகிறாய்....
மழையென வருவாயா கொஞ்சம்
மழைநின்று வரும் வெய்யிலாய்
சில நிமிடம் சுட்டாலும்
சுகமாய் உணர்கிறேன்.....
அகமெல்லாம் நீயிருக்க
அக்கம்பக்கம் ஆளிருக்க
கடும் சொல்லால்
கோபத்தை கக்கினாலும்
சிரித்துக்கொண்டே ரசிக்கிறேன்....
இன்று என்னவள்
என்னிடம் பேசுகிறாளென்று...