உன் காதலால்
வானத்தின் காதலை
மண்மகள் ஏற்கிறாள்
மனம்பறித்தவன்
மனம் குளிர
திசையெல்லாம்
பச்சைவண்ணம் பூசி
கொதிக்கும் கண்கொண்டு
உன்காதலை கோடையாக்க
துடிக்கும் சூரிய கள்வனை
உன் அங்க ஆடை மேகத்தால் தடுத்து
உன்பாச பரிதவிப்பை பறைசாற்றுகிறாய்!
உரசும் காதலில்லை உன் காதல்
தொடாமலே பூக்கிறாள் பூமி
ஊணக்காதல் இல்லை உனது
உன்னதகாதல் உன் காதல்
மழைமுத்தம் கேட்குதோ!
மரக்கிளைகள்
ஆடி ,ஆடி அழைக்கிறது
ஆசைக்காதல் இல்லை உனது
அன்புக்காதல்
உயிர் இல்லை என்றாலும்
உயிர்கள் வாழுதே உன் காதலால்
உயர்ந்த காதல்தான் உன் காதல்...!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
