காதல் தேவதையே
அன்றொரு நாள்
என் வாழ்வில்
மறக்க முடியாத நாள்....
உன்னைக் கண்ட
முதல் நாள்...!
அதுவரை
கலங்கமற்று இருந்த
என் மனதில்
உன் விழிப் பார்வையால்
காதல் கல்லை
எறிந்துவிட்டாயே....!
உன் முதல் பார்வையிலே
என் மனம் சிதறி
உன் பாதத்தில் விழுந்ததடி...!
என்னை காதலில்
விழவைத்த காதல் தேவதையே...
இப்பொழுது நீ
எங்கேயடி இருக்கின்றாய்...?
மின்னலைப் போல்
என் முன்
தோன்றி மறைந்துவிட்டாயே...!
எப்போதடி நீ
என் மேல்
மழை போல் வந்து
விழப் போகின்றாய்...!

