என் ஏக்கம் தீரவே

விடவா தொடவா
விடுமுறை தரவா - நீ
கனவின் வரவா
உயிரின் உறவா

கவிதை வடிவாய்
காற்றின் உருவாய்
உயிரினுள் கலந்து
உறக்கம் பறித்தாய்

உன்னை தேடி - தொலைத்த
நிமிடங்கள் கோடி
ஒருமுறை சொல்லடி
என் ஏக்கம் தீரவே
நான் கொஞ்சம் தூங்கவே .....

எழுதியவர் : ருத்ரன் (12-Apr-16, 10:27 pm)
பார்வை : 110

மேலே