சாட்டிங் -ஒருபக்க கதை

சாட்டிங் -ஒருபக்க கதை
-
சாட்டிங்கில் நண்பனைத் தொடர்புகொண்டான் பரத்.
‘‘டே சிவா, பிஸியா?’’
‘‘இல்லை பரத், சொல்லு!’’
‘‘இன்னும் டெல்லியிலதான் வேலை பாக்குறியா?’’
‘‘ஆமா!’’

‘‘எனக்கொரு ஹெல்ப்…’’
‘‘சொல்லுடா?’’
‘‘வீட்டுல பொண்ணு பார்த்திருக்காங்க…’’
‘‘நைஸ்… கங்கிராட்ஸ்!’’

‘‘பொண்ணு டெல்லிலதான் இருக்கா, பேரு ஸ்நேஹா.’’
‘‘நீயும் டெல்லிக்கு டிரான்ஸ்பர் ஆகப்போறியா?’’
‘‘இல்லை… அவ சென்னைக்கு வந்துடுவா!’’
‘‘நான் என்ன பண்ணணும்?’’

‘‘அவ ஆபீஸ் வரைக்கும் போய் கொஞ்சம் விசாரிக்கணும்!’’
‘‘டன். அட்ரஸ், ஃபோட்டோ மெயில் பண்ணிடு!’’
‘‘டன்!’’

ஒரு வாரம் கழித்து…
‘‘என்னடா ஆச்சு? ஸ்நேஹாவைப் பார்த்தியா?’’
‘‘ம்…’’
‘‘எப்படி இருக்கா?’’
‘‘சூப்பர். ஆனா உனக்கு சரிப்பட்டு வரமாட்டா!’’
‘‘என்னடா சொல்றே?’’

‘‘அவளுக்கு டெல்லிதான் பிடிச்சிருக்கு. இங்கேயே செட்டில்
ஆக விரும்புறா. பேரன்ட்ஸ் கட்டாயப்படுத்துறதனாலதான்
உன்னைக் கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருக்கா… அப்புறம்
ஒரு விஷயம்…’’

‘‘என்ன?’’

‘‘அவ இங்கே ஒரு பையனை லவ் பண்றா. இன்னிக்குதான்
எனக்குத் தெரியும். பையன் சுமாராதான் இருக்கான், ஆனா
அவளுக்குப் புடிச்சிருக்கு!’’

ஒரு மாதம் கழித்து, சிவா-சிநேஹா கல்யாணப் பத்திரிகை
பரத் கைக்கு வந்தது.

—————————————-
–அஜித்

எழுதியவர் : படித்ததில் பிடிப்பு (13-Apr-16, 12:11 pm)
பார்வை : 254

மேலே