மதிய தூக்கம்
ஒரு பள்ளியின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் தினமும் மதிய வேளையில் குட்டி தூக்கம் போடுவது வழக்கம்.
மாணவர்களை சமாளிப்பதற்காக அவர் தான் தினமும் கனவுலகில் ஒரு சாதுவை சந்தித்து விட்டு வருவதாக சொல்வார்.
ஒரு நாள் மாணவன் ஒருவன் வகுப்பில் உறங்கிப்போக... ஆசிரியர் கடிந்தார்.
அதற்கு அவன் தான் கனவுலகத்திற்கு சென்றதாகவும் அங்கே ஆசிரியர் சந்திக்கும் அதே சாதுவை சந்தித்ததாகவும் கூறினான். ஆசிரியர் கோபமாக அப்படியா? சாது என்ன சொன்னார் என்று கேட்க.... தினமும் ஒரு ஆசிரியர் அங்கு வந்து அவரை சந்தித்ததுண்டா என்று கேட்டதற்கு, அப்படி யாரும் வருவதில்லை என்று அந்த சாது கூறியதாகவும் சொன்னான்.
இனி மதிய தூக்கம் ஆசிரியருக்கு ஏது?