கிரன்பேடி

*நீ ஒரு பெண்ணையும்
நான் ஒரு ஆணையும்
வரைய வேண்டும்
முதலில் வரைந்து முடிப்பவர்களே
வெற்றி பெற்றவர்களென்று
நமக்குள் ஒப்பந்தம்,
பெண்ணை
வரைய வேண்டுமென்றால்
கூந்தலும் வரைய வேண்டும்
கூடுதல் நேரமாகும்,
ஆணுக்கு கூந்தல் மிச்சமென்று
பொறுமையாக வரைகையில்
எதிர்பாராத நொடியொன்றில்
வரைந்து விட்டேனென்று
நீ ஆரவாரம் செய்து
வரைந்த ஓவியத்தை காண்பிக்கிறாய்
ஓவியத்தில் கம்பீரமாயிருக்கிறார்
கிரன்பேடி*

எழுதியவர் : சுகுமார் சூர்யா (13-Apr-16, 7:22 pm)
பார்வை : 86

மேலே