உன் பதிலை எதிர்பார்த்து
நீ வரும் வழியில்
உன் வருகையை எதிர்பார்த்து
என் விழிகள்!
காகிதத்தில் கடிதம் எழுதி
கால் கடுக்க நின்றிருந்தேன்
உன்னிடம் கொடுக்க
மனதில் ஒரு கிலி
ஏற்றுக்கொள்வாயோ மாட்டாயோ என்று
கொடுத்துவிட்டேன் ஒரு வழியாக
படித்துவிட்டயோ பாவையே
காத்திருக்கிறேன்
உன் பதிலை எதிர்பார்த்து..!