ஒத்திகையற்ற ஒரு கவியரங்கம்

ஒத்திகையற்ற ஒரு கவியரங்கம் அரங்கேறியது இங்கே
கொட்டகைக்கட்டி கோளோச்சியது
நட்பியம் அங்கே
மொட்டாய் மலராய் பூவாளியாய்
விரிந்தது பாங்கே
நட்பாய் அதைத்தாண்டி கற்(பு)பாய்
காண்பது வேறெங்கே.

புவனா:
தூண்டில் இட்டு இழுப்பதேனோ பெண்ணே
இந்த மீன் எப்பொழுதும் நட்பென்னும் வளையில் சிக்கி இருப்பதை நீ பாராயோ பெண்ணே
நன்றாக கவனி என்னை பத்திரமாக எடுத்து செல் நழுவ விடாதே

சுபா:
நீ நழுவினாலும் என் பிடி நழுவாது நான் பற்றுவேன் உன்னை.
இடியாக எது வந்தாலும் முன்னின்று நான் ஏற்பேன்
செடியாக உன் துளிர்களை கைகொடுத்து மீட்பேன்
சேயாக உனை எடுத்து தாயாக உனை காப்பேன்

புவனா
தாய்மடியில் கண்ணுரங்க காசு வேண்டாம்
அன்பென்னும் சாமரம் போதும்
அதை உன்னிடத்தில் பெற்றேன்
அன்னையாய் நீ பிள்ளையாய் நான் நட்பின் இலக்கணமே வாழ்க கொற்றமுடன்.

சுபா
தூண்டில் ஒரு முடிவில்லை நமக்கு
அதிலும் கைகோர்த்து மனம் லயித்து
அன்பென்னும் மூச்சு கொண்டு சுவாசிப்போம்
கண்ணால் காதலித்து நட்பை மெய்பிப்போம்

புவனா
தூண்டில் ஒரு முடிவில்லை நம் நட்பு அதையும் கடந்ததது ஏ பெண்ணே
நான் கை கோர்க்கவில்லை மனம் கோர்த்து பிணைந்துள்ளேன்
நீயே நான் நானே நீ என ஆன பின் பிரிவென்பது எங்கே
மகளே அது ஆண்டவன் நினைத்தாலும் முடியாது
என் இருதயம் துடிப்பதை நிறுத்தினால் மட்டுமே முடியும்
என் சுவாசம் என்று ஒன்று தனித்தில்லை நீ சுவாசிக்க நான் வாழ்வேன்
என்றும் வீழ பிறக்கவில்லை

சுபா
விரல் நுனியில் குறுஞ்செய்திகள்
விழியோரத்தில் பனித்துளிகள்
உதட்டோரத்தில் புன்முறுவல்கள்
மனதோரத்தில் மெய்சிலிர்ப்புகள்
💖💖💖💖💖💖💖

புவனா
நாம் நட்பியம் படைக்க பிறந்தவர்கள்
படைத்ததை ரசிக்க பிறந்தவர்கள்
விரல்நுனியும் விழியோரம் உதட்டோரம் எல்லாம் கடந்து நட்பென்னும் தீக்கனலாய் உடலெங்கும் ஜொலிக்கின்றோம்
இந்த ஜோதி நட்பென்னும் பரிசல்களுக்கு ஒரு கலங்கரைவிளக்கம்.

சுபா
சுவாசத்திற்கு ஒரு இலக்கணம் இது
பாசத்திற்கு ஒரு பாமாலை இது
நேசத்திற்கு ஒரு இலக்கியம் இது
பரவசத்திற்கு ஒரு பொன்னேடு இது.
💖
வாழ்க நம் நட்பின் குழாம்.

எழுதியவர் : சுபாசுந்தர் (16-Apr-16, 2:30 pm)
பார்வை : 267

மேலே