ஆனந்த கூட்டம் - 090416
அன்பான நட்புக் கூட்டம்
நட்பான அன்புக் கூட்டம்
மனமெல்லாம் ஆனந்த கோஷம்
இதுவே எங்கள் வாழ்வின் உச்சம்
முப்பத்தி ஏழு ஆண்டுகள் எப்படி நகர்ந்து
கண் சிமிட்டும் நொடியில் மாயமாய் மறைந்தது
ஒன்பது வயது பாலகனாய் நட்பை துவக்கினோம்
இன்று ஐம்பதை தாண்டி மீண்டும் கூடினோம்
தத்தம் மனைவியர் புடைசூழ.
புது நட்பும் உருவானது அவர்களுக்குள்
நட்பே நட்புக்கு உதவியது இங்கு மட்டும் தான்
இத்தனை வருடம் இடைவெளி இருந்தும்
ஒருவருக்கொருவர் தொடர்பிலிருந்தும்
நேருக்கு நேர் பார்த்த பின்
பின்னோக்கி சென்றது எங்களின் மனம்
கோவையும் அழைத்தது
எங்களை மீண்டும் இணைத்தது
அறுவர் கூடி
அறுசுவை உண்டு
அளவிளா மகிழ்ச்சியை
அன்போடு பகிர்ந்து
அவர் தம் மனைவியர்
அனைவரும் கூடி
அதிரடியாய்
அனுபவித்தனர்
உள்ளத்தால் உறவாடி
இந்த நாளை
பசுமையாய்
மனதில் இருத்தி
அனுதினமும்
அசை போடுவோம்
அவரவர் இஷ்டப்படி.
தேதி - 09.04.2016. இரவு - 9.06 மணி.