எந்தன் பாதையில் உந்தன் காலடி நாளும் வேண்டுமடி

நான் ஆசுவாசப்பட உன்
அரவணைப்பே போதுமடி

ஊரே பார்த்தாலும் பரவாயில்லையடி
உன்னை கட்டிக்கொள்வேனடி

சிடுசிடுக்கும் முகம்
உன்னிடம் எப்பொழுதும் இல்லையடி

எனை உயரே பறக்க வைக்கும் (விடும்)
உன் புன்னகையடி

பாராட்டி சீராட்டி வளக்கும் தாயடி
எனை உச்சிதனை முகரடி

எந்தன் பாதையில் உந்தன் காலடி
நாளும் வேண்டுமடி...

உந்தன் புன்னகை
எந்தன் பொன்நகை
அணிந்துகொள்ளடி
எனையும் அணிந்துகொள்ளடி

எந்த செயலின் ஆரம்பமும்
உன் புன்னகையில்
தொடங்குமடி
அன்புகள் வந்து குவியுமடி
அதில் கிறங்கி சாய்கிறேனடி

சரிவுகள் இல்லாமல்
வாழ்க்கையா
என் கையை பிடித்து ஏணியில் ஏற்றுகிறாயடி

அன்பால் வெல்கிறாயடி
பிரிவால் கொல்கிறாயடி

என் நெஞ்சுக்குழியில் நீ
விழுந்தது ஏனோ நானடி

நெஞ்சு வலிக்கிறதடி
அடிக்கடி
வலியேதும் உனக்கு
இல்லையேடி

பொய்யாக கூட மறந்துவிடாதடி
உண்மையாக இறந்து கிடப்பேனடி

என்னுயிர்களுக்குச் சமர்பணம்

~ பிரபாவதி வீரமுத்து



Naan aasuvaasappada un aravanaipe pothumadi
Oore paarththalum paravaayilaiyadi
Unnai kattikkolvenadi
Sidusidukkum mugam
Unnidam eppozhuthum illaiyadi
Enai uyare parakka vaikum(vidum)
un punnagaiyadi
Paaraatti siraatti valakkum thaayadi
Enai uchchithanai mugaradi
enthan paathaiyil unthan kaaladi naalum vendumadi...
Unthan punnagai
Enthan ponnagai
aninthukolladi
enaiyum aninthukolladi
entha seyalin aarampamum
un punnagaiyil thodangumadi
Anbukal vanthu kuviyutha(ma)di
athil kirangi saaykirenadi
Sarivukal illamal
vaazhkkaiya
En kaiyai pidithu yeniyil yetrukiraayadi
anbaal velkiraayadi
pirivaal kolkiraayadi

en nenchukkuzhiyil nee vizhunthathu yeno naanadi
Nenchu valikirathadi
adikkadi valiyethum unakku
Illaiyedi
poyyaaga kuda maranthuvidathadi
unmaiyaga iranthu kidappenadi

Dedicates to My Dear FRIENDS Nandhini , Surya Jas

~ Prabavathi Veeramuthu

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (10-Apr-16, 7:41 pm)
பார்வை : 334

மேலே