நொடிகளில் நான்

நிமிடம் ஓர் நினைவு நினைக்க மறவாத மனது
நிகழ்வுகளின் கனவு நீ இல்லாதபொழுது
அருகில் இருப்பதெல்லாம் மாயம்
அது – அறியாத உன் புன்னகை தந்த காயம்
எடுத்து கோர்த்த மொழிகள்
யார் என்ற மௌனம்
எதனையும் உன்னிடத்தில் பெற்றேன் இன்பமாய்
எவராலும் எட்டிவிட முடியாத உயரமாய்
தொலையாத நினைவுகள் கனவிலே
தொலைந்துவிடும் கனவுகள் மனதிலே
துறக்க ஒன்றும் இல்லை உறக்கத்திலே
உறக்கம் இன்றும் இல்லை உந்தன் கலக்கத்திலே
ஊருக்கு அமைதியாய் புறத்திலே
உள்ளுணர்வின் ஆலைவுகள் அகத்திலே
என்றோ சேரும் ஓர் நிமிடம்
பின்பே மனதாரும் உயிர் நொடியும்...