நெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம் -முஹம்மத் ஸர்பான்

உயிருக்குள் உயிராய் பூத்தேன்.
மலரொன்றை வாட வைத்து...,

இனிக்கின்ற மார்பில் அன்பெனும்
வாய் வைத்து உயிர்த்துளிகளை
அணுவாய் உண்டேன்...,

பூவென்று முள்ளைக் கேட்டால்
புன்னகை பூ பூப்பாய்..

பிள்ளை பசி தாங்காதென்று வட்டி
வாங்கி சட்டிக்குள் பொங்கல் வைப்பாய்.

பத்துத்திங்கள் வேதனை
சுமந்தாள் என் தேவதை
அழகை எடுத்து எனக்குத் தந்தாய்
கைம்மாறு செய்யவில்லை
அழுகை தான் தந்தேன்.......,

என்னை உடலால்
போர்த்திக் கொண்டாள்.
அவள் உடல் போர்த்த
சேலை வாங்கிக் கொடுத்ததில்லை...,

என் வயிற்றில் கரு இல்லை அம்மா
உன்னை சுமந்து ஈன்ற பின் பாலூட்டி
ஆசை முத்தம் வைக்க.....,

என் துடிப்பில் தாய் பிறக்கிறாள்
என் உடலில் உயிராய் வாழ்கின்றாள்
நெஞ்சோடு வாழும் கரு தந்த சுவாசம்

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (16-Apr-16, 5:46 pm)
பார்வை : 255

மேலே