தினம் ஒரு காதல் தாலாட்டு - பாடல் - 78 தோழிமார் காதல்

பார்த்தாரு அவரொரு பார்வை
போட்டாரு தோல்மீது சால்வை
கேட்டாரு என்னிதழ் மதுவை
தந்திடவா சொல்லு என்தோழி..!
(குழு)
தந்திடு உன்னிதழ் மதுவை
சுவைப்பாரு மலைத்தேனாக
காதல் மலரும் தேனரும்பாக
அது தித்திக்கும் தேன்கரும்பாக!



ஒரு நாள் பாத்து ஆளானேன்
அன்றே அவரது ஆளானேன்
அவராக ஒருநாள் வந்தாரு
உன்மேல் காதல் என்றாரு
(குழு)
ஆரம்பம் ஆரம்பம்
பூ மாசம் ஆரம்பம்
தை மாசம் கல்யாணம்
பூவாசம் மேல் வீசும்



என் கல்மனது இலகாகி
அவரையே தினம் ஏங்கி
சொல்வடிவில் எழுத்தாகி
கவிதைகளாய் உருவாகி
அவருயிரை மீட்கிறது
அவர் நாதம் கேட்கிறது
(குழு)
பவளம் பூ பந்தலிலே
நீ அமரும் நாள் வரும்
பாய்போடும் பந்தத்திலே
பத்து மாதத்தில் பிள்ளை வரும்..!

எழுதியவர் : சாய்மாறன் (16-Apr-16, 6:09 pm)
பார்வை : 76

மேலே