இருப்பதா? இறப்பதா?...

இருப்பதா? இறப்பதா?

இருக்கென நினைத்தது இல்லாமல் இருப்பதால்,
இல்லாததை நினைத்து இறப்பதா? இல்லை இருப்பதா?
இருக்கென இல்லாததை இருப்பதாய் தான் நினைத்ததை,
இருந்ததென நினைத்து தான் இறப்பதா? இல்லை இருப்பதா?
இருப்பது இருந்திருந்தால் இன்று அது தான் இறந்திருக்குமா?
இல்லாதது இல்லையெனில் இறக்கத்தான் முடியுமா? இறந்திருக்குமா?
இல்லாததை இதயத்திலிருந்து எறிந்துவிடு, மீண்டு எழுந்துவிடு, இருந்துவிடு......

இருப்பதென்றும் இல்லாமல் போவதில்லை;
இல்லாமல் போனதென்றும் இருந்ததில்லை.

எழுதியவர் : நட்புடன் (18-Jun-11, 7:11 pm)
சேர்த்தது : நட்புடன்
பார்வை : 382

மேலே