முதியோர் உதவித்தொகை
நரைவெளுத்து நாடிகுறையும்,
உதிரம் உருகி உயிர் உறையும்,
நாண் குன்றி நாள் எண்ணும்,
முக்கால் காலமது.
உறவற்ற உயிராகி,
மண்ணொடு மண்ணாக
மங்கி வாழும் மகத்தான உயிரதுவே!
புவி நிழல் நோக்கும் புகழ்பெற்ற உயிரதுவே-யாவர்
நித்திரையிலில்லா உடல்கூடு நிலையதுவே!
அந்த தள்ளாத காலத்திலே,
நாள் தள்ள பொருளின்றி
அவதியுறும் அனைத்துயிர்க்கும்
அடைக்கலம் உண்டென்று
பறைசாற்றும் சொல்லதுவே!
"முதியோர் உதவித்தொகை"
என்றும் அன்புடன்,
ப.ஆனந்த்