இணை-த-யத்தில் வாழும் எம் தமிழ்

காடெல்லாம் அழிந்து போச்சு !
கட்டிடமும் வளர்ந்து போச்சு !
காணுமிடம் எல்லாமே ;
கணினிமயம் ஆயிருச்சு !

தமிழ் வளர்த்த மன்னர்கூட ;
தடம் பதித்த சுவடும் உண்டு !
தாரை தப்பட்டை தெருக்கூத்தும்;
தமிழை வளர்த்த கதையும் உண்டு !

பண்டிதரின் துணை கொண்டு ;
பட்டப்படிப்பை முடித்ததுமுண்டு !
இணையதள உதவி கொண்டு ;
இறுதி படிப்பும் படிப்பதுண்டு !

நாடு கடந்த மக்களாலே -
நாளெல்லாம் வளர்ந்ததுவே !
இதயத்திலே வாழும் தமிழ் -
இதமாக வளர்கிறதே !

இமயமாக தெரிகிறதே !
இணைய சேவை வந்ததினால் !
அகிலமெல்லாம் அறிகிறதே !
இணையதள வழி தனிலே !

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (17-Apr-16, 9:46 am)
பார்வை : 82

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே