தினம் ஒரு பாட்டு தத்துவம் - 3 = 79

படித்துப் பட்டம் வாங்கிய நாங்க
நாட்டின் பட்டாதாரி தாங்க !
நகலை பட்டாம்பூச்சி செய்து
பட்டத்தை பறக்க விடுறோங்க !

நாங்க இன்ட்டர்வியூக்கு - போகாத ஊருமில்ல...
நாங்க வேலைத்தேடி - அலையாத நாளுமில்ல...
நாங்க ஏறியிறங்காத - கம்பெனி படிகளுமில்ல...
நாங்க எதிர்கொள்ளாத - கேள்வி கணைகளுமில்ல..

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தினமும்
கூட்டம் கூடுது ! தினமும் கூட்டம் கூடுது !
நாட்டில் வேலையில்லா திண்டாட்டமோ
அதைவிடக் கூடுது ! அதைவிடக் கூடுது !

கஷ்ட்டப்பட்டு படிச்சும்கூட வேலை கெடைக்கல;
நமக்கேத்த வேலை கெடைக்கல...!
வேலைக்கொடுக்க கத்தைப்பணம் கேட்குறானுங்க
பாவிப்பசங்க; படுபாவிப் பசங்க !

முக்கிமுக்கி படிச்சநாங்க முன்னேற வேணாமா ?
மூளைக்கு வேலைக்கொடுக்க வேலை வேணாமா ?
மூணுவேளை சோத்துக்குத்தான் முயன்று படிச்சோம் !
மூடிவெச்ச புத்தகத்தையா கஞ்சியா குடிப்போம் ?

பணமூட்டை பதுக்குபவனே நாட்டாமை நம்ம நாட்டுல;
அவன் பாவமூட்டை சுமப்பதற்கு தயக்கம் காட்டல.....!
எத்தனையோ பெரிய மனுஷன் நம்ம நாட்டுல; - அவன்
அத்தனைப் பேரும் நல்லவனா நம்ப முடியல....!

லஞ்சத்தில் ஊறிக்கிடக்கும் நம்ம தேசம் – பிறரை
வஞ்சித்து முன்னேற கொள்கை முழக்கம் !
அச்சத்தில் வாழ்கின்றது ஏழை வர்கம் – அவரை
உச்சத்தில் ஏற்றிவிட என்ன தயக்கம் ?

வேலைக்கெடைச்சா வேலியாக குடும்பவாழ்வை காப்போம் !
வேண்டாதவங்க பேச்சைக்கேட்டு விஷமியாக மாட்டோம் !
ஆளும்அரசுகளே ! எங்களை ஏறெடுத்துப்பார்க்க வேண்டும் !
எங்களின் நியாயமான கோரிக்கையை நீங்கஏற்க வேண்டும் !

எழுதியவர் : சாய்மாறன் (17-Apr-16, 6:32 am)
பார்வை : 133

மேலே