பெண்ணே என் பேருயிரே
பெண்கள் தினம் ...
மங்கையரின் மாதமாய்...
மார்ச் மாதம்..
12 மாதங்களில்..
ஒரு மாதம்...
மங்கையருக்கா?
என் வாழ்நாளில்...
இத்தனை ஆண்டுகளும்...
என்னை சுற்றி...சுற்றி...
பெண்மையே...
பெண்ணின் பெருமையே ...
என் தாய் பெற்று தர..
அவள் சகோதரிகளுடன்...
நால்வரும்... நான்கு திசைகளிலும்...
காத்து வளர்க்க...
என் குழந்தை பருவம்...
என் தாய் பெண்களுடன்...
என் சித்தியின் மகளாய் பிறந்து...
பட்டுபூச்சி போல்...
பறந்து... திரிந்து...
அண்ணா என்று...
அன்புடன் அழைத்து...
இரட்டை குழந்தைகள்...
இருந்தும்...
இன்றும் என் நலம்...
கருதும் என் தங்கை....
மற்றும் ஒரு தங்கையோ...
என் மகளை போல...
சித்திரமாய் வளர்ந்து...
என் சிந்தனயில்...
எப்போதும்...
சிறகடிக்கும்...
சின்ன குயில்...
இளம் சிறாராய்...
பள்ளியில்...
லூசி, குணசீலி, பிலோமினா
அனைவரும் என் அபிமான...
பள்ளி ஆசிரியைகள்...
பச்சை நெல்லை...
பதப்படுத்திய...
என் கல்வி தெய்வங்கள்...
பக்கத்தில் பெண்கள் உட்கார்ந்தால் ...
ஷேம் ஷேம் அப்போது .....
பள்ளி பருவம்...
ஆடவர் பள்ளியில்...
ஆங்காங்கே பேருந்தில்...
கோவிலில், பக்கத்து வீட்டில்...
என்று...
பாவாடை, தாவணிகள்...
சின்ன, சின்ன, சிற்பங்களாய்...
சிறகடித்த... சின்ன கிளிகள்...
என் கனவுகளின்...
கதாநாயகிகள்....
கல்லூரியில் என் காதலி...
அன்புக்கும், ஆசைக்கும்...
உறவுக்கும்... உரிமைக்கும்...
அர்த்தங்கள் பல சொல்லி...
கலைந்து விட்ட மேகமாய் ...
அந்த எழிலரசி...
பின்னாளில்...
பெண்களின் உலகம்...
பிரமிப்பாய் விரிந்தது...
சென்னையில்...
அவள் பரிணாமங்கள்...
பலவும்...
பல வடிவங்களில்....
என் அலுவலகம் ....
என் அடுத்த உலகம்....
மகளிர் மட்டும்...
ஆண்கள் ஆங்காங்கே...
என் பெண்கள்...
என் ஒவ்வொரு நிமிடத்திலும்...
சக தொழிலாளியாய், தோழியாய்...
மருத்துவராய்,
துணையாய், தொல்லையாய்...
அன்பு தொல்லையாய்...
ஒருவருக்கொருவர் ஆறுதலாய்...
துன்பத்திற்கு தோள் கொடுத்து...
உள்ளத்தில் பல சுமைகளோடு...
உறுதியாய் நின்று....
சரி பாதியாய்...
வாழ்க்கை நிர்வாகத்தில்...
ஆண்களுக்கு துணை நிற்கும்...
என் பெண்ணே....
ஜீவன் வெளியேறி...
மீண்டும்... உட்புக...
வலியாய் வலியெடுத்து...
வாரிசு வெளியேற ...
உன் கடையோர கண்ணில்...
துளிர்க்கும்...
அந்த சிறு துளி கண்ணீருக்கு...
இணை....
இறைவனுமில்லை...
.
உலகில் பெரும்பகுதி தண்ணீரே...
என் வாழ்வில் பெரும்பகுதி கன்னியரே...
என் வாழ்வை வண்ணமாக்கிய...
இன்ப-மாக்கிய,
தெளிவாக்கிய,
வளமாக்கிய....
என் பெண்களுக்கு....
என் இதய கோயில் உண்டு...
எப்போதும்...
என் மந்திர கன்னியருக்கு...
மார்ச் மாதம் மட்டுமல்ல....
மாதரம் உள்ள வரையில்....
என் உயிர் நன்றி சொல்லும்... ஆனந்த் வி