வெட்டுக்கிளிகள் பழமொழி கவிதைகள் - 10 , பாகம் - 2

வெட்டுக் கிளிகள் சிறகு
விரிக்க வாத்தியங்கள் தேவையில்லை
பயத்திலும் நாட்டியம் ஆடும்

பயத்தில் ஆடும் ஆட்டங்கள்
பெற்றுத் தராது வெற்றியை.

முகம் திரும்பாமலும்
தொலைவில் வருவதையும்
கண்டறியும் வெட்டுக்கிளி
எவ்வித நோக்கமுமின்றி
எதையும் நோக்காமல்
சிறகு விரித்திட
இதயம் தூய்மையாய்
இருந்தால் போதும்
இல்லையேல் யார்,என்ன
எப்போது எதைச் செய்வார்களோ
என காரணம் தேடித்திரிய வேண்டும்

சூழ்நிலைக்கு ஏற்றார்போல்
தன்னை அதனுள்
பொருத்திவிடும் புத்திசாலிகள்
வெட்டுக்கிளிகள்

எதனுள்ளிருந்தும் உண்மையை
விள்ளாதிருப்போர்
எதனுடனும் பொய்களை
புணைய வேண்டியதில்லை

வெட்டுக்கிளிகள்
கிளிகள் ஆகாது
ஊர்க்குருவி பருந்தாகாது

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (17-Apr-16, 8:41 pm)
பார்வை : 237

மேலே