சுவடுகள்
சுவடுகள்
முத்துக்களின் கனவு
நீச்சல் கற்கும் சிப்பி
ஆகாயத்தின் வரம்
ஒரு துளியில் ரகசியம்
மழை துளி....!
நாவின் அசைமொழி
புயலின் நண்பன்
பகைவனுக்கும் தோழன்
பள்ளி செல்லா பண்பு
உடையா வால்(ள்)
குரைக்கும் நாய்....!
தங்கத் தூளியில் ஆடி
சிரித்தபடி குழந்தை
தங்கக் கொலுசின் வீச்சில்
கடவுள் நுழைகிறார்
மழைதாகக்கிண்ணமேந்தி
மின்னல்....!
இரவும் பகலும்
மோதியதில்
உடைந்து போன
நிலா துண்டுகள்
நட்சத்திரங்கள்....!
ஓய்ந்த மழையின் ஓசை மொழி
ஊமையின் அசையா மொழி
மலர்களின் அசை மொழி
அலைக்கடல் வருகை மொழி
காற்றின் இசை மொழி
வலம்புரியின் சுவாசமொழி
மௌனம் .....!
இரவு நேர மூட்டைப்பூச்சி
கரையான் ஏடு
பழங்கால இசைத்தட்டு
இறந்தகால கயிற்றுக்கட்டில்
நினைவுப் பாதையின் அனுபவக்கல்
சாவியில்லா இரும்புப்பெட்டி
முதுமை----!