கைநாட்டுக் கட்டழகி

தென்றலின் கூட்டணியில் மலர்கள்
வென்றதடி தோட்டத்தில்
தேர்தல் கூட்டணியில் யார் வெல்வார்
தெரிய வில்லையடி
யாருக்கும் ஓட்டு இல்லை என்று
நோட்டாவில் எல்லோரும் கைவிரித்துவிட்டால்
இன்னும் ஒருமுறை தேர்தலா
ஒன்னும் புரிய வில்லையடி
கறுப்புக் கவிதையாய் வந்த கார்முகிலி !
அரசியல் எனக்கு அவ்வளவா பத்தாது
சொல்லடி நீயும் என் கைநாட்டுக் கட்டழகி !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Apr-16, 8:22 am)
பார்வை : 137

மேலே