கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா?
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
ஆஹாஹா.. ஆஹாஹா..

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்
கல்லைக் கனி ஆக்கும் உன்தன் ஒரு வாசகம்
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
உண்டென்று சொல்வதுன்தன் கண்ணல்லவா
வண்ண கண்ணல்லவா
இல்லையென்று சொல்வதுன்தன் இடையல்லவா?
மின்னல் இடையல்லவா?

ஆஹாஹா.. ஆஹாஹாஹா ஆஹாஹாஹா ஆஹாஹாஹா

கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா?
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா?

ஆ..ஆ ஆ ஆ.. ஆ..ஆ ஆ ஆ..

கம்பன் கண்ட சீதை உன்தன் தாயல்லவா?

எழுதியவர் : கவி கண்ணதாசன் (18-Apr-16, 6:16 am)
பார்வை : 649

மேலே