குருவாயூருக்கு வந்து விட்டோம்

குருவாயூருக்கு வந்து விட்டோம்
குழந்தை கிருஷ்னணை பார்த்து விட்டோம்
அவன் மழலை மொழியில்
பேசிய பேச்சை
காது குளிர கேட்டு விட்டோம்
அவன் எம்மிடம் கேட்ட முதல் கேள்வி
இத்தனை நாளாய் எங்கிருந்தீர்
ஏன் இந்த தாமதம் இங்கு வர ?
நீ எங்கும் இருப்பவன் என்பதினால்
அனுதினமும் உன்னை சுவாசித்தோம்
நான் கூப்பிட்ட குரல் உமக்கு
கேட்கவில்லையா
கூப்பிட்ட விதம் தான்
சரியில்லையா
மீண்டும் கேள்வி கேட்டவனை
நாங்களும் கூர்ந்து பார்த்திட்டோம்
அந்த குழந்தை கண்ணன்
தன் தலையை கவிழ்த்து
கண்களில் நீரை வழிய விட்டான்
நாங்களும் பதரித்தான் போய்விட்டோம்
என்னவள் அந்த பாலகனின்
பிஞ்சு முகத்தை சற்றே நிமிர்த்த
அவன் கண்கள் கலங்கிட
எம்மை பார்த்தான்
விஷயத்தின் வீரியத்தை நாம்
உணரமுன்னே
என் மனைவிடம் அவன்
தாவி விட்டான்
அவள் கழுத்தினை இருகப்
பற்றிக் கொண்டு
அவள் தோளில் முகத்தை
பதித்திட்டான்
தாயின் சுகத்தை அனுபவித்தான்
தாய்ப் பாசத்தை அவளுக்கும்
தந்திட்டான்
அந்த குழந்தையின் செயலில்
தம்மை மறந்து
வெறும் சிலையாய் நாங்களும்
நின்று விட்டோம்
உறவின் முறை சொல்லி
எம்மை அவன் அழைக்க
பூரிப்பில் உள்ளம் நெகிழ்ந்து
விட்டோம்
என்னவளிடத்தில் அவன்
கொஞ்சிக் கொண்டே
அவளை ஆனந்த உலகிற்குள்
அழைத்து சென்றான்
எத்தனை பேர்க்கு இது கிட்டும்
புண்ணியம் நாங்களும் செய்தோமோ
அந்த கோகுல கிருஷ்னணை
கண்டோமோ
சற்றே நினைவு வந்தவனாய்
என்னையும் திரும்பிப் பார்த்திட்டான்
என் மன ஓட்டத்தின் எண்ணத்தை
புரிந்து கொண்டு
தன் கண்களாலேயே எனக்கு பதிலலித்தான்
பின் மறுபடியும் அவள் பக்கம்
திரும்பிக்கொண்டான்
நேரமும் அசுர வேகத்தில் கடந்து செல்ல
அவளை இருகப் பற்றிக் கொண்டே
அயரச்சியில் அவனும் உறங்கி விட்டான்
ஒரு நிமிடம் நாங்களும் யோசித்தோம்
எங்கள் பிள்ளையாய் மாறிவிட்ட
அந்த மாயக் கண்ணனை
எங்களுடன் அழைத்துச் செல்ல
முற்பட்டோம்
தாய், சேய் ஸ்பரிசத்தின்
உணர்வினிலே,
அவனும் அவளுக்கு ஏதோ
உணர்த்தி விட்டான்
அதை புரிந்து கொண்ட என்னவளும்
அந்த கிருஷ்னணை தொட்டிலில்
படுக்க வைத்தாள்
தத்துப் பிள்ளையாய்
அவனும் வளர்ந்த்ததினால்
எங்களையும் தத்து எடுத்துக்
கொண்டு விட்டானோ
அவன் தூக்கத்தை கலைக்க
விருப்பமின்றி
அமைதியாய் அவனை வணங்கி விட்டு
புது வாழ்க்கையை தொடங்க
புறப்பட்டு விட்டோம்
அந்த குருவாயூரப்பன் இருப்பான்
எம்முடனே
எங்கள் அன்பு மகனாய்
என்றென்றும
மழலை மொழியில் பேசிக்கொண்டு
அளவில்லா மகிழ்ச்சியை தந்து கொண்டு
குருவாயூருக்கு வந்து விட்டோம்
குழந்தை கிருஷ்னணை பார்த்து விட்டோம்
அவன் மழலை மொழியில் பேசிய
பேச்சை
காது குளிர கேட்டு விட்டோம்
தேதி - 06.04.2016. நேரம் - இரவு - 11.05 மணி.