பிரிவின் வலி
சற்றும் தயங்காத வார்த்தைகளில்
சொக்கிப் போனேன்
நினைத்து நினைத்துப் பார்க்க கூடிய நேரங்களில்
மயங்கி நின்றேன்
வண்ணத்துப் பூச்சி போல் புதிது புதிதாய்
வண்ணங்கள் பெற்றேன்
பிரிந்த நேரம் உன் கண்ணின் சொல்
ஆழத்தை உணர்ந்தேன்
சற்றும் தாமதிக்காமல் போனதை எண்ணி
மௌனத்தில் ஆழ்ந்தேன்