காதலின் வெற்றி
நான் உன்னைப் பார்த்தேன்
நீ என்னைப் பார்க்க வேண்டுமென துடித்தேன்
உன்னோடு பேசவே தவித்தேன்
உனக்க வாழவே நினைத்தேன்
என் காதல் வெளிப்படுமோ என திகைத்தேன்
நீ ஏற்பாயோ? மறுப்பாயோ? என பயந்தேன்
என்னை அறியாமல் புன்னகைத்தேன்
உன்னைக் கண்டபின் கண்ணிமைத்தேன்
உணவை விடுத்தேன்
தூக்கத்தைத் தொலைத்தேன்
பொறுமையை இழந்தேன்
என் காதல் சொல்ல துணிந்தேன்
அச்சத்தோடும் நாணத்தோடும் உன்னிடம் சொல்ல வந்தேன்
ஆனால் இறுதியில் தான் உணர்ந்தேன்
நீ என்னை உயிராக நேசிக்கிறாய் என்று.