அவள் ராட்சசி

என் இரவை
கத்திரி கண்ணால்
கத்திரிக்க வந்த
ராத்திரி ராட்சசியே!!!💞

என் ஆத்மாவின்
ஆணிவேர் பிடுங்கு
இருதயத்தில் இடறி விழுந்து
இம்சை செய்!!!💞

உன்னால் உன் கண்ணால்
என் உயிருக்குள்
எவ்வளவு ஊடுறுவ முடியுமோ
அவ்வளவு ஊடுறுவி செல்!!!💞

உன் உதட்டால்
என் உடலில்
உன் பெயர் எழுது!!!💞

என் கண்களில்
உன் பிம்பம் மட்டுமே
பிரதிபலிக்கும் படி
அந்த அம்பு விழியால்
அறுவை சிகிச்சை செய்!!!💞

தாய்மையின் பரிபூரனத்தை
சரிபாதியாய் கொடு!!!!💞

காதலின் கரையில் நின்று
கண்கட்டி வித்தை காட்டாமல்
களத்தில் இறங்கு!!!💞

வானம் வாய் பிளந்து
பார்க்கட்டும்
என் வாசல் வா!!!💞

காற்று கைகட்டி
நிற்கட்டும்
கட்டியணை!!!💞

மூச்சு காற்றுக்கும்
மோகம் பற்றட்டும்
முத்தம் இடு!!!💞

இந்த ஜென்மத்தை
இன்றே முடித்து வை
அடுத்த ஜென்மத்தை
ஆரம்பிப்போம்!!!💞

எழுதியவர் : வேலு வேலு (18-Apr-16, 6:37 pm)
Tanglish : aval raatchasi
பார்வை : 334

மேலே