இணையத்தில் வாழுமெந்த மிழ் - நேரிசை வெண்பாக்கள்

இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

கன்னலன்ன செந்தமிழில் கண்ணும் கருத்துமாய்
என்ன எழுதினாலும் ஏனென்று – என்றும்
துணைவந்து பத்திரிகை யில்வராது; இன்றோ
இணை(த)யத்தில் வாழுமெந்த மிழ்! 1

முன்பெல்லாம் பத்திரிகை யில்முயன்று வந்தால்தான்
கன்னலன்ன நம்(எ)மெழுத் தெல்லாமே – முன்னை
திணைநிலத்தில் வித்திட்ட தேன்வாழை போல
இணை(த)யத்தில் வாழுமெந்த மிழ்! 2

தண்ணென்ற நந்தமிழை தக்கபடி நானிசைக்க
எண்ணமுடன் நான்பதிய உண்டுயிடம் – திண்ணம்!
இணையயிதழ் நம்கவிதை ஈனும் மணியாம்
இணை(த)யத்தில் வாழுமெந்த மிழ்! 3

பல விகற்ப இன்னிசை வெண்பா

முன்பெல்லாம் பத்திரிகை யில்முயன்று வந்தால்தான்
கன்னலன்ன நம்(எ)மெழுத் தெல்லாமே – பின்னையோர்நாள்
பேர்பெறுவோம்; இன்றுடனச் சாகி இனிதே
இணை(த)யத்தில் வாழுமெந்த மிழ்! 4

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Apr-16, 10:08 pm)
பார்வை : 88

மேலே