10 செகண்ட் கதைகள் - நினைப்பும் நடப்பும்
ஒரு நிறுவனத்தின் முதலாளி தனக்கு அந்தரங்க காரியதரிசி நியமனம் செய்யும் பொறுப்பை ஒரு உப நிறுவனத்திற்கு கொடுக்க,அவர்களும் பலரை நேர்முக தேர்வு செய்து முடிவாக மூன்று பேரை கடைசி நேர்முகத் தேர்விற்கு அந்த முதலாளியிடம் கூட்டி வருகிறார்கள்.கூடவே ஒரு மனோதத்துவ நிபுணரும் வருகிறார்.தேர்வு ஆரம்பிக்க, அந்த மூன்று பெண்களிடம் ஒரே கேள்வி கேட்கப்படுகிறது..
“நான்கும் நான்கும் எவ்வளவு?”
முதல் பெண் : இதென்ன? எட்டுதான்!
இரண்டாம் பெண்: நாற்பத்து நான்கு!
மூன்றாம் பெண்: அது எட்டாகவோ நாற்பத்து நான்காகவோ இருக்கலாம்.!
அவர்களை வெளியே காத்திருக்க சொல்லி விட்டு அந்த முதலாளியிடம் அந்த மனோதத்துவ நிபுணர் சொல்கிறார்.
.
"அந்த முதல் பெண் வெளிப்படையான குணமுடையவள் இரண்டாவது பெண் பல்கோண சிந்தனை உடையவள் மூன்றாமவள் எச்சரிக்கையானவள்..
நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கிறீர்கள்?"
அவர் சொல்கிறார்..”மஞ்சள் ஷிபான் சாரீ கட்டிக்கொண்டு ஸ்லீவ்லெஸ் போட்டுக்கொண்டு உயரமாக இருந்தாளே... அவளை!”