10 செகண்ட் கதைகள் - தேர்தலில் நினைப்பும் நடப்பும்
தமிழக வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று முடிவு செய்ய RG யின் உதவியை நாடுகிறார்கள்..பல அலசல்களுக்குப்பிறகு அவர் சொல்கிறார்..
“கருணாவும் குடும்பத்தினரும் மட்டும் வாழவேண்டும் என்றால் திமுகவிற்கு ஓட்டளியுங்கள்
ஜெயாவும் அமைச்சர்களும் மட்டும் வாழவேண்டும் என்றால் அதிமுகவிற்கு ஓட்டளியுங்கள்
ராமதாசும் கட்சியும் மட்டும் வாழவேண்டும் என்றால் பாமகவிற்கு ஓட்டளியுங்கள்
யாருமே வாழவேண்டாம் என்றால் மநகூ விற்கு ஓட்டளியுங்கள்....”
பிறகு வாக்காளர்களை கேட்கிறார்..
“நான் சொன்னது புரிந்திருக்கும் என நம்புகிறேன் ..இப்போ நீங்க சொல்லுங்க.உங்க முடிவென்ன?”
அவர்கள் ஒரே குரலில் சொல்கிறார்கள்..
“ஒரு ஓட்டிற்கு யார் அதிக பணம் கொடுக்கறாங்களோ. அவிங்களுக்கு!”