வயல்வெளிக் கவிதைகள்

மழைபொழிய மண்குளிரும் மண்குளிர நன்னிலம்
தான்செழிக்க நெல்குவி யும்
பொழியா மழையினால் நெல்வயல் வாடும்
உழவன் மனமும்வா டும்
செலுத்த முடியா கடனினால் தற்கொலை
ஏரோட்டி கண்ணீரி லே
உழவு உயிர்நாடி இவ்வுலகி னுக்கு
உழவனுயிர் நாடி மழை
வான்வெளியில் நீலம் கருமுகில் வெண்ணிலா
ஏர்நீர் வயல்வெளி யில்
--- கவின் சாரலன்