கூடிக் கும்மாளம் போடுவோமே

கூடிக் கும்மாளம் போடுவோமே !
`````````````````````````````````````````````````````
பள்ளி விடுமுறை விட்டாச்சு
துள்ளி விளையாட வாருங்களேன்
வெள்ளி முளைத்திடும் வேளைவரை
உள்ளம் களித்திட ஆடிடுவோம் !
நித்தம் படித்ததால் சோர்வுநீங்க
மொத்த நட்புகளும் ஒன்றிணைந்து
சித்தங் குளிர்ந்திடச் சோலையிலே
புத்தும் புதுக்கதைப் பேசிடுவோம் !
வெயிலும் கொளுத்திடக் கவலையின்றி
மயில்போல் நடனமும் ஆடிடுவோம்
குயிலாய்க் கூக்குரல் எழுப்பிடுவோம்
வயிற்றுப் பசிதனை மறந்திடுவோம் !
தேடித் தண்ணீரைத் தெளித்துவிட்டுக்
கோடி இன்பமும் பெற்றிடுவோம்
பாடித் திரிந்திடும் பறவைகளாய்
கூடிக் கும்மாளம் போடுவோமே ....!!!