காதல் திருமணம்

பெண்ணாக பிறந்தேன்
மகிழ்ச்சியடைந்தனர்...

முதல் குழந்தையாகையால்
'மகாலஷ்மி' என்று பெயரும் சூட்டினர்.....
என் ஒவ்வொரு
அசைவையும் ரசித்தனர்...!

வளர்ந்தேன்......!
அவர்களின் சந்தோஷத்தோடு.....

குமரி ஆனேன்...!
அவர்களின் சந்தோஷம்
சற்றே குறைந்தது
இன்னும் கொஞ்சம் காலம் தான்
மகள் தன்னுடன் இருப்பாள்
மகள் மருமகளாகும் நேரம்
நெருங்குகிறது என்று......

வேலைக்குச் சென்றேன்....!
அவர்கள் பெருமையோடு
அனைவரிடமும் கூறினர்
தன் மகள் உயர்ந்த
பதவி வகிக்கிறாள் என்று....

காதலித்தேன்...!
ஏற்பார்களோ...? மாட்டார்களோ...?
என்ற பயத்துடன்
தெரிவித்தேன் அவர்களிடம்..
அவர்களோ
மகிழ்ச்சி கடலில் மூழ்கினர்
ஏனெனில்
அவர்கள் திருமணமும்
'காதல் திருமணம்' என்று....!

வேறு வேறு ஜாதியினராய்
கலப்பு மணம்....
காதல் திருமணம்....
செய்து கொண்டோம்
என்று கூறி
ஆச்சரிய பட வைத்தனர்...

என் காதலுக்கும்
பச்சை கொடி காட்டிவிட்டனர்.....!

எழுதியவர் : நித்யஸ்ரீ (19-Apr-16, 5:04 pm)
Tanglish : kaadhal thirumanam
பார்வை : 308

மேலே