அதுவரைக்கும் மாதாஜி பிதாஜி தான்
மாதாஜி, பிதாஜி ரண்டு பேரும் இங்க வாங்க.
@@@
என்னடி திடீர்னு மாதாஜி பிதாஜி -ன்னு எங்களக் கூப்படற. இதுவரைக்கும் நீயும் தம்பியும் எங்கள மம்மி டாடி-ன்னு தானே கூப்பிடுவீங்க.
@@@
எனக்கு அக்ஷயா -ன்னும் தம்பிக்கு அஷ்வின்-னும் இந்திப் பேருங்கள வச்சிருக்கீங்க. எங்க தமிழாசிரியருங்க தான் நம்ம தாய் மொழி செம்மொழி. உலகின் முதல் மொழி. தாய் மொழிலே பேரு வைக்காம இந்திப் பேருங்கள பிள்ளைங்களுக்கு வைக்கறது நம்ம தாய் மொழியை அவமதிக்கும் செயல்ன்னு சொன்னாங்க. தாய் மொழியை அவமதிக்கிறது பெத்த தாயை அவமதிக்கறதவிடக் கேவலமான செயல்ன்னும் சொன்னாங்க.
@@@
அடி பொடீ. உங்க தமிழாசிரியருங்களுக்கு வேற வேலை இல்ல. இப்பெல்லாம் இந்திப் பேரப் பிள்ளைங்களுக்கு வைக்கறது தான் நாகரிகம்.
#@@@@
எங்க தமிழாசிரியருங்க சொல்லறது தான் சரி. நீயும் அப்பாவும் எனக்கும் தம்பிக்கும் சட்டப்பூர்வமா நல்ல தமிழ்ப் பேருங்கள வைக்கற வரைக்கும் உங்கள மம்மி டாடின்னும் கூப்பிடமாட்டோம்; அம்மா அப்பான்னும் கூப்பிடமாட்டோம். அதுவரைக்கும் மாதாஜி பிதாஜி தான். எங்க பேருங்கள மாத்தினதுக்கப்பறம் தான் நீங்க அம்மா அப்பா. மம்மி டாடியும் எங்களுக்கு இனி வேண்டாம்.
@@@@@@@@@##########################################################################################################################
சிரிக்க அல்ல. சிந்திக்க. மொழிப் பற்றை வளர்க்க.
###########################################################################################################################################நன்றி: விக்கிபீடியா:
( माताजी mātājī) is a Hindi term meaning 'respected mother'.
(पिताजी pitaji) is a Hindi term meaning 'respected father'.

