ஏண்டா நா செயல்படாத ஆச்சியா

ஏண்டா நா செயல்படாத ஆச்சியா?
###
டே ராமநாதா இங்க வாடா.
@@
வந்திட்டேன் ஆச்சி. என்ன எதுக்குக் கூப்பிட்டீங்க.
@@
சரி, நம்ம பகுதிலே எத்தன ஆச்சிங்க இருக்கறாங்க?
@@
என்ன ஆச்சி எங்கிட்டப் போயி இந்தக் கேள்வியைக் கேக்கறீங்க. இங்கே மூணு மைல் சுற்றளவ்ல இருக்கற ஒரே ஆச்சி நீங்க தான்.

எனக்கு என்னடா வயசு ஆகுது?
@@
அத நீங்க தான் சொல்லணும் ஆச்சி.
@@
டேய் ராமநாதா எனக்குத் தொண்ணூத்து அஞ்சு வருசம் ஆகுது. நா இன்னும் ஆரோக்கியமா இருந்துட்டு மூணு வேலைக்காரங்கள மட்டும் தொணைக்கு வச்சுட்டு அஞ்சு தலைமுறைக்கு முன்னாடி என்னோட எள்ளு ஆச்சி காலத்திலே அஞ்சு கோடி ரூபாய் செலவழிச்சுக் கட்டின கோட்டை மாதிரி உள்ள இந்த மாளிகையை பராமரிச்சிட்டு எனக்கு வேண்டிய பதார்த்தங்களே நானே சமச்சு சாப்பிட்டிட்டு ரொம்ப ஆரோக்கியமா இருக்கறேன். இவ்வளவு பெரிய மாளிகையையும் அதச் சுத்தியுள்ள காய்கறித் தோட்டத்தையும் ஒரு நாளைக்கு பத்து தடவ சுத்திச் சுத்தி வர்றேன். இந்த வயசிலயும் நா எவ்வளவு சுறுசுறுப்பா இருக்கறேன். எம் பிள்ளைங்க பேரப் பிள்ளைங்க எல்லாம் வெளிநாட்டிலே இருக்காங்க. ரண்டு வருசத்துக்கு ஒரு தரந்தாந் என்ன வந்து பாத்துட்டுப் போறாங்க.
@##@
ஆச்சி இதெல்லாம் எனக்குத் தெரிஞ்ச விசயந்தானே. அதப் போயி இப்ப எதுக்கு என்கிட்டச் சொல்லறீங்க?
@@
இல்லடா நேத்து ஒரு பொடிப் பையன் ஜீப்பிலே ஒலி பெருக்கிலே இந்த செயல்படாத ஆச்சியை தூக்கி எறியுங்கன்னு கத்திட்டுப் போறாண்டா. அவம் மேலா கேசு போடுடா ராமநாதா.
@@
உங்கள அவஞ் சொல்லல ஆச்சி. செயல்படாத ஆட்சின்னு சொல்லியிருப்பான். அத நீங்க தப்பா நெனச்சிட்டீங்க.
@@@
ஓ… அப்பிடியா அப்ப சரி விடு. போகட்டும்.

எழுதியவர் : மலர் (20-Apr-16, 4:02 pm)
பார்வை : 112

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே