வாழ என்ன இருக்கு
அடிமாட்டு விலைக்கு
உழுத மாட்டை விற்று
வாங்கிவந்த விதைநெல்லு
வாட்டிவிட்ட வெய்யிலிலே
கருகிப்போக அனாதையாக் கிடக்குது
மாட்டு வண்டி.
கோவணத்தை துவைத்து
மறைவா நின்று உலர்த்தும்
அம்மணத்தை மறைக்க
பட்ட மரமிருக்கு ,
மானத்த மறைக்கத் துணியில்லா
கவலைகொள்ளா பேரக்குழந்தை
வயிற்றுப் பசிமறைக்க
வெயில் காலத்திலேயே விலைபோகா
விளைநிலம் மட்டுமே இருக்கு
இதையும் வித்துட்டா
வாழ்வதற்கு இனி என்ன இருக்கு?
*மெய்யன் நடராஜ்