காட்சிக்கு ஒரு பாட்டு
நீலவானம் சிவந்திருச்சி உன்னக்கண்ட பின்னால
கோலமயிலே கொஞ்சம்நில்லு கூடவாரேன் அன்பால
அத்துவானக் காட்டுக்குள்ள ஆறஅமரப் பேசிடலாம்
சத்தமில்லா முத்தத்தில சொர்க்கத்தையே கண்டிடலாம்
காதல்பித்து ஏறிச்சுன்னா கண்ணுமண்ணு புரியாதா
சீதனமா நாவருவேன் முடிச்சுமூணு போட்டதுமே
காலம்பல காத்திருந்தோம் தடைகள்பல தாண்டிவந்தோம்
பாலமாக உறவிருக்க பாதயெல்லாம் பூவனமே !
சாமக்கோழி கூவயில வாட்டுதடி ஒன்நெனப்பு
கோமளமே கொண்டப்பூவும் கொஞ்சிடவே சொல்லுதடி
நான்புடிச்ச ராசாத்தியே நாளையெண்ணி பாத்திருக்கேன்
மான்விழியே மரிக்கொழுந்தே மாமன்வாறேன் கனவுக்குள்ளே ....!!!!