காதல் கவி

நிலை குலைந்த மனதில்
கவி மழையில் நனைந்து எழுதுகிறேன் உனக்காக
ஒரு மொழி ஏந்தி

செவியோடு கவிபாடிய
என் குரல்
எங்கே மணலோடு
புதைந்து போகும்
என் உடலை பாட

மனம் உடைந்து
கவி சிதைந்து நான்
பாடும் மொழியே இது
கவியே பதில்
நீயே

மதி மறைந்து
மணல் படிந்து
உள்ளதோ
என் கதி உணர்ந்து

மலையோடு நதியோடு
அசைந்து
மனதோடு புதைந்த
இசையே
என் கவி

கடலோடு படகோடு
உடைந்தது என்
உணர்வோடு அழிந்தது ஏனோ

ஞானம் திறந்து
மனம் மறந்து
மதம் உடைந்து
போனதே கவி
பாடும் மொழியால்....


கவிஞர் அஜ்மல்கான்
- பசறடிச்சேனை பாெத்துவில் -

எழுதியவர் : கவிஞர் அஜ்மல்கான் (21-Apr-16, 3:43 am)
Tanglish : kaadhal kavi
பார்வை : 89

மேலே