உன்னுடன் காதல் வந்ததால்

உன்னுடன் காதல் வந்ததால்
தனிமையில் காதல் பேசி
என்னை தொலைத்து
உன்னுள் என்னை தேடுகிறேன்னடி

என் இதயத்தில் வளரும் காதல் மலரை
மலர்கள் போல வளர்த்து விட வேண்டும்
வளந்த மலரில் பூக்கள் மலர்ந்து

வாசனை சிந்துவது போல
சந்தோசங்கள் சிந்தி விட வேண்டும்
அதில் சுரக்கும் தேன் போல
என் அன்பும் சுரக்க வேண்டும்
தேனுக்கு ஏங்கும் தேனீ போல
என் அன்பின் ஏக்கத்துக்கு
அவள் ஏங்கிட வேண்டும்
இவ்வாறு உருவாகும் காதலில்
எங்கள் உறவை வளர்த்து
அவளுக்கு கொடுத்து விட வேண்டும்
மனமும் சிந்தனை கொள்ளுதடி

எழுதியவர் : கலையடி அகிலன் (21-Apr-16, 4:32 am)
பார்வை : 288

மேலே