விழிகளில் தேங்கி நிற்கும் உன் நினைவுகள் 555

உயிரானவளே...

நான் விழிமூடி திறக்கும்
அந்த நேரம் வரும் உன் உருவம்...

நான் உறங்கிய போது
என்னுடன் உறவாடுதடி...

என் விழிகளில் வடிந்த
கண்ணீர் சொல்லுமடி...

உன்மீதான என்
காதலின் ஆழத்தை...

என்னை மறந்துவிடு
என்றாயடி நீ...

என்னை மன்னித்துவிடு
என்றேனடி நான்...

ஏனடி மன்னிக்க
மறந்தாய் என்னை...

நீ எனக்கு இறுதியாக கொடுத்த
இதழ் முத்தம் சொன்னதடி...

உனக்கு இன்னும் என்மீதான
காதல் குறையவில்லை என்று...

நீ என்னை அணைத்த உன் வாசம்
என் உடைகளில் இன்னும் வீசுதடி...

உன்னை மறக்காத
என் இதயம்...

விழிகளில் தேங்கி நிற்கும்
உன் நினைவுகள்...

என் உயிரானவளே......

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (21-Apr-16, 9:49 pm)
பார்வை : 1135

மேலே