என் இதயகோவிலில் நீ மட்டும்தானடி இன்று 555

என்னவளே...

உனக்காக நான் காத்திருந்த
போதெல்லாம்...

என் நினைவுகள் எல்லாம்
உன் மீதுதான்...

இன்று தனிமையில் மட்டும்
கண்ணீர்தாண்டி என்னோடு...

உன் நினைவுகள் என்னில் தேங்கி
பாறையாக மாறியபோதும்...

உளிகொண்டு உன் உருவத்தை
செதுக்கி வைத்திருகிறேனடி...

என் இதயகோவிலில்
நீ மட்டும்தானடி இன்று...

என்னை கலங்கவைக்குதடி
உன் மௌனம்...

என்றாவது ஒருநாள் நீயும்
கலங்கினால் என்னை நினைத்து...

அன்று நீ உணர்வாய்...

நீயும் என்னை
நேசித்தாய் என்று.....

எழுதியவர் : முதல்பூ பெ.மணி (23-Apr-16, 8:29 pm)
பார்வை : 650

மேலே