நெஞ்சுக்குள் நினைப்புகள்

எனதன்பு ஒன்றை மட்டும் உனதாக்கிக் கொண்டிருந்தாய்
உனதன்பு ஒன்றை மட்டும் எனதாக்கிக் கொண்டிருந்தேன்
நமதன்பு சமுத்திரத்தில் நாம் மூழ்கிக் கிடந்திருந்தோம்
நாளை பற்றி நினைக்காமல் அன்றையழகாய் வாழ்ந்திருந்தோம்

உனக்கு ஒரு துன்பமென்றால் என்னிதயம் வலித்திருக்கும்
எனக்கு ஒரு துன்பமென்றால் உன்கண்கள் அழுதிருக்கும்
நம்மோட காதலிலே நாம் உலகை மறந்திருந்தோம்
நம் காதல் தோட்டத்திலே பூக்கள்மலர்ந்த காலமது

என்னோட நிழலாக இருட்டில் கூட நீயிருப்பாய்
உன்னோட பேச்சாக பகல் முழுதும் நானிருப்பேன்
நம்மோட காதல் தானே பத்திரிக்கை செய்தியாச்சு
நம் காதல் புத்தகத்தில் தினம்கவிதை மலர்ந்திடுச்சு

யார் கண்ண வச்சானோ நீபிரிஞ்சு போயிட்டியே
உன் பிரிவு ரணமாக நான்பேதலிச்சு போயிட்டேனே
நெஞ்சுக்குள் எப்பவுமே அக்கால நினைப்புகள் தான்
எனை இன்றும் வாழவைக்கும் அக்காலம் கனாக்காலம்...!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 11:11 am)
பார்வை : 1712

மேலே