கிறுக்கனின் காவியம்

>தனித்த நிலையில் இதுவரை இருந்துவிட
இன்றேனும் புதியதாய் அனுபவம் தருவதற்கோ
>இனித்த மொழிபேசி இதழோடும் சுவைபூசி
இழைந்தோடும் அழகை இன்னமும் மெருகேற்றி
>பனித்த துளியெலாம் துடைத்த புதுமலராய்
பளிங்கு மேனிதன் நளினத்து நடைவைத்து
>குனித்த புருவத்தின் கீழிரண்டு அம்பெடுத்து
மண்ணிலே வீசிவந்தாள் மனமுற்ற மயக்கஞ்சொல்ல!!!

>வரிசிலை கோமானும் உணர்த்தினன் தீரம்
வில்லொடித்த பிறகன்றோ வரித்தனன் தாரம்!!
>நறுங்குழல் நாதம் தருஞ்சுகம் போதும்
கரியவன் தனக்கு கோதையர் கீதம்!!
>கரிக்கி ளையோனும் மரிகடல் கடந்து
சேரிடம் சேர்ந்தனன் தேவசேனை மணந்து!!
>அரியவர் பலரும் அருஞ்செயல் புரிந்தே
அடுத்தவர் கருத்தில் தன்னை பதித்தார்!!

>சிறியவன் நானும் என்னவென சொல்வேன்
வழக்கம்போல் நேரங்கொல்வேன்!! என்னில் பூத்ததை
>திரையிட்டு மறைத்தேன் என்னை நானே
சிறையிட்டு பிடித்தேன் தகுதி வேண்டியே!!
>பிரியச் சொல்லெடுத்து துவங்கவரும் கவிதையை
பிரியச் சொல்லுதிர்த்து பாதியில் கலைத்தேன்!!
>உரிய தருணம் உகந்ததை செய்தேன்
மடந்தையை மறுத்த நீதியும் தவறோ??

எழுதியவர் : கார்த்தி கண்ணதாசன் (23-Apr-16, 3:29 pm)
பார்வை : 99

மேலே