இதயம் இணையம் தமிழ்

இணையம் எங்கும் தமிழ்
இதயம் வெல்லும் தமிழ்
கால மாற்றம் ஏற்று
பவனி செல்லும் தமிழ்

செம்மொழி எனைப் பாரென்று
உரக்கச் சொல்லும் தமிழ்
இணையத்தில் கவிதை பொழிந்து
ரசனை அள்ளும் தமிழ்

இலக்கண இலக்கியம் அறிய‌
இணையமே உதவிடும் ந‌ன்று
கடல்தனை கடந்து சென்றாலும்
தொடர்ந்திடும் தமிழும் இன்று

பிறமொழி கலப்பினை விட்டு
நம்மொழி சிறப்பாய் பேச‌
தமிழர்கள் நினைத்திட வேண்டும்
தமிழிங்கு நிலைத்திட வேண்டும்

இணையம் இருக்கும் வரைக்கும்
தமிழும் இருக்கும் பெட்டகமாய்
இதயம் துடிக்கும் வரைக்கும்
தமிழே ஜெயிக்கும் நிச்சயமாய்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 9:12 am)
பார்வை : 1655

மேலே