சொல்ல மறந்த காதல்

சொல்ல மறந்த காதல்
மிக சோகம் நிறைந்தது
மெல்ல நினைத்துப் பார்க்க‌
மனப் பாரம் கொடுப்பது

இதயம் வலிக்க பலருக்கு
காரணம் மறைத்த காதல்
உதயம் வாழ்வில் குறைவே
ரணமே அந்தக் காதல்

காயம் மனதில் இருக்கும்
வலியை வாழ்வில் கொடுக்கும்
மாயம் செய்யும் இன்றும்
மொழியை மறக்க வைக்கும்

காதல் உதித்த நேரம்
இருக்கும் இதய ஓரம்
சொல்ல மறந்த செயலே
இன்றும் மறக்கடிக்கும் துயிலை

கனவில் ஜெயித்த காட்சி
அடிக்கடி வந்து போகும்
மனமும் ஆறுதல் பெரும்
அதுவே வாழப் போதும்

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (24-Apr-16, 10:58 am)
பார்வை : 493

மேலே